அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிற வங்கியின் ATMல் பணம் எடுத்தால் அதற்கென்று தனியாக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் இது ஒரு சந்தோஷமான செய்தி. ஆனால் நீங்கள் எந்த ATMல் வேண்டுமானாலும் கூடுதல் கட்டணம் இல்லாமல்
பணம் எடுக்கலாம் என்ற வசதி வந்துவிட்டால் சில தனியார் வங்கிகள் சிக்கனம் கருதி புதிதாக ATM நிலயங்களை திறக்காமல் இருக்கும். இது ஏற்கணவே இருக்கும் ATMல் கூட்டத்தை அதிகரிக்கும். எனவே பிற வங்கிகளின் ATM ல் பணம் எடுத்தால் அதற்காக குறிப்பிட்ட அளவு கட்டனம் வசூலிப்பதுதான் சரியான நடைமுறை.
இன்னும் சொல்லபோனால் ATM என்பது வங்கிதுறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொறு வங்கியும் தனித்தனியாக ATM அமைத்து அதற்கென வாடகை, ஊழியர்கள் மற்றும் நிர்வாக செலவு செய்வதை விட, ATM சென்டர் நடத்துவதையே தனித்துறையாக மாற்றி அதை அரசாங்கமோ அல்லது தனியாரோ நிர்வாகிக்கலாம். ஒரு ATM நிலையத்தில் செய்யப்படும் பணபரிமாற்றத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து கட்டணம் வசூலித்துகொள்ளலாம்.
*************************************************
1 comment:
Hi shiva if you want help regarding Domain registration and other activities
You can also Contact 9894137286
My Blog http://www.karthikeyan.net.in
Regards,
Karthikeyan
Post a Comment