Sunday, April 6, 2008

HIDE FOLDER

கம்ப்யூட்டரில் மிக முக்கியமான தகவல்களை ஸ்டோர் பண்ணிவைத்திருக்கிறீர்கள். அல்லது எதோ ஒரு தளத்திலிருந்து பல அரிய(?) தகவல்களை இறக்கம் செய்து அதை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துள்ளீர்கள். கவனகுறைவினால் யாராவது அந்த ஃபோல்டரை அழித்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைபடுகிறீர்களா? பிறருக்கு தெரியாமல் அந்த டைரக்டரியை எப்படி மறைப்பது?

கம்ப்யூட்டரிலேயே hide folder என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஃபோல்டர்களை மறைக்கலாம். ஆனால் இந்த ஆப்ஷன் பற்றி தெரிந்தவர்கள் மிகவும் ஈஸியாக எல்லா ஃபோல்டர்களை பார்த்துவிடுவார்கள்.

இது தானே உங்கள் கவலை. விடுங்கள் இதோ இருக்கின்றது ஒரு தீர்வு.

www.cleanersoft.com ( FREE HIDE FOLDER) எனும் வலைதளத்தில் கிடைக்கும் இலவச மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் மறைக்க விரும்பும் ஃபோல்டர்களை பாஸ்வேர்ட் மூலம் மறைத்துகொள்ளலாம்.

தகவல் உதவி. PKP http://pkp.blogspot.com/2008/03/blog-post_26.html

*************************************************

கடலூர் பார்வை, ஏப்ரல் இதழில் வெளியானவை

ATM

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிற வங்கியின் ATMல் பணம் எடுத்தால் அதற்கென்று தனியாக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் இது ஒரு சந்தோஷமான செய்தி. ஆனால் நீங்கள் எந்த ATMல் வேண்டுமானாலும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்ற வசதி வந்துவிட்டால் சில தனியார் வங்கிகள் சிக்கனம் கருதி புதிதாக ATM நிலயங்களை திறக்காமல் இருக்கும். இது ஏற்கணவே இருக்கும் ATMல் கூட்டத்தை அதிகரிக்கும். எனவே பிற வங்கிகளின் ATM ல் பணம் எடுத்தால் அதற்காக குறிப்பிட்ட அளவு கட்டனம் வசூலிப்பதுதான் சரியான நடைமுறை.

இன்னும் சொல்லபோனால் ATM என்பது வங்கிதுறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொறு வங்கியும் தனித்தனியாக ATM அமைத்து அதற்கென வாடகை, ஊழியர்கள் மற்றும் நிர்வாக செலவு செய்வதை விட, ATM சென்டர் நடத்துவதையே தனித்துறையாக மாற்றி அதை அரசாங்கமோ அல்லது தனியாரோ நிர்வாகிக்கலாம். ஒரு ATM நிலையத்தில் செய்யப்படும் பணபரிமாற்றத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து கட்டணம் வசூலித்துகொள்ளலாம்.
*************************************************
கடலூர் பார்வை, ஏப்ரல் இதழில் வெளியானவை

ஜோக்ஸ்

ஒரு குழந்தை தன் அம்மாவிடம்...

"அம்மா, மனித இனம் எப்படிமா உருவாயிற்று?"

"கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைச்சார். அவங்களுக்கு குழந்தை பிறந்து படிப்படியா மனித இனம் உருவாயிற்று."



அதே குழந்தை தன் அப்பாவிடம் இதே சந்தேகத்தை கேட்க...


"குரங்கிலிருந்து படிப்படையா உருவானதுதாம்மா மனித இனம்"

குழம்பிபோன அந்த குழந்தை மீண்டும் தன் அம்மாவிடம்...

"அம்மா, கடவுள்தான் மனிதனை படைச்சார்னு நீ சொல்ற, ஆனா அப்பா குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான்னு சொல்றார். எதும்மா உண்மை?"

"ரெண்டும் சரிதான். நான் சொன்னது எங்க பரம்பரையைபத்தி, உங்க அப்பா சொல்றது அவர் பரம்பரையைபத்தி."

**************************************************

நல்லது, கெட்டது



கடலூர் பார்வை, ஏப்ரல் இதழில் வெளியானவை

எங்கே போகும் இந்த பாதை...



காலம் மாற மாற நாமும் அதற்கு தகுந்தாற்போல் மாறவேண்டும். இதுதான் உலகநியதி. சிலநாடுகள் இந்த மாற்றங்களை புரிந்துகொண்டு, தங்களையும் மாற்றி கொண்டு வேகமாக வளர்ச்சிபாதையில் போய்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா பல்வேறு விஷயங்களில் இந்த மாற்றங்களை புரிந்துகொள்வதே இல்லை. பிரச்சினை தீவிரமாகி வேறு வழியில்லை என்ற சுழ்நிலையில் மட்டுமே விழித்துகொண்டு மாற்றங்களை ஏற்றுகொள்வது பற்றி யோசிக்கும்.
இந்த தலைப்பில் பல்வேறுவிதமான மாற்றங்களைபற்றி விவாதிக்கலாம். ஆனால் இங்கே கவனிக்கபோவது அரசின் கவனகுறைவினால் விவசாய நிலங்கள் (தேவையற்ற) குடியிருப்புக்காண நிலங்களாக மாறுவதைபற்றிதான்.


மக்கள்தொகை பெருக பெருக அவர்கள் வசிப்பதற்காண குடியிருப்புகளும் பெருகுவது இயற்கையான ஒன்றே. ஆனால் இந்த மாற்றங்கள் நமது இயற்கை வளங்களை பாதிக்காமல் அதேநேரத்தில் நமக்கு புதிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல் பார்த்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சொந்தமாக ஒரு வீடு என்பது மக்களின் நியாயமான கனவுதான். சேமிப்பும் அதை பாதுகாப்பாய் முதலீடு செய்ய மக்கள் விரும்புவதும் வரவேற்கபட வேண்டிய விஷயம்தான். ஆனால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கவேண்டுமே தவிர உபத்திரமாய் இருக்ககூடாது. உதாரணமாக மக்கள் தங்கள் சேமிப்பை வங்கிகளில் முதலீடு செய்தால் அதன் மூலம் வங்கிகளில் சேரும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தொழில்துறையினருக்கு கடனாக சென்று பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்புகள் உருவாவதற்கும், அரசுக்கும் பல்வேறு வகையில் வரி வருவாய்க்கு வழிவகுக்கும். வங்கிகளில் வட்டிவிகிதம் குறைவென்றால் அதற்கு மாறாக பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட், இன்சுரன்ஸ் போன்ற துறைகளில் முதலீடு செய்தாலும் அது வளர்ச்சிக்கே வித்திடும். ஆனால் நிலங்களில் செய்யப்டும் முதலீடுகள் கண்டிப்பாக நாட்டுக்கு எதிர்மறையான பிரசினைகளைதான் உருவாக்கும்.

முதல் பிரச்சினை, நகர எல்லைக்குள்ளேயே பல மனைகள் வீடுகள் கட்டப்படாமல் காலியாக இருக்க சுற்றியுள்ள விவசாய நிலங்களை மனைகளாக்கி வீணாக்குவது. அத்தியாவசியமான உணவு பொருட்களை லாபநோக்கம் கருதி பதுக்குவது எப்படி குற்றமோ அதேபோல் லாபநோக்கத்தில் செய்யப்படும் இதுபோன்ற முதலீடுகளால் விளைநிலங்களை பாழாக்குவதும் குற்றமே.

இரண்டாவதும், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை என்னவென்றால் அரசாங்கத்துக்கு (நகராட்சிகள்) நிறைய செலவினங்ளை உருவாக்குவது. நகரங்கள் அகலமாக விரிவடைந்து கொண்டே போனால், அவர்களுக்கென்று சாலை போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் போன்ற சேவையை செய்வதற்கு மேலும் மேலும் முதலீடுகள் செய்ய நேரிடும். விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சில நகரங்களில் கேபிள் டிவிக்கான கட்டணங்கள் அபார்ட்மெண்ட்களில் ஒரு மாதிரியாகவும் தனித்த வீடுகளில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். காரணம், அபார்ட்மெண்ட்களில் குறைந்த செலவில் (வயரில்) பெரும்பாலானோருக்கு இனைப்புகள் வழங்கிவிடலாம். அவர்களுக்கே இப்படியென்றால், கண்டிப்பாக அரசுக்கும் இது பலவேறு வகையில் செலவினங்களை குறைக்கும்.

வெளிநாடுகளில் 50 மாடி 100 மாடி என கட்டடங்கள் எழுப்புவதற்கு காரணம் அவர்களிடம் இடம் இல்லை என்பது இல்லை. பல வகைகளில் இது வசதியாக இருப்பதால் நிலபரப்பில் இந்தியாவைவிட மிகபெரிய நாடுகள் கூட நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு / அலுவலகங்களுக்கே முன்னுரிமை தருகின்றன. இந்தியாவும் நகரங்களில் சலுகைகள் மூலம் இதுபோன்ற குடியிருப்புகளை ஆதரித்தால் விளைநிலங்களையும் காப்பாற்றலாம் மற்றும் நகரங்களில் இடநெருக்கடி தவிர்க்கப்பட்டு அகலமான சாலைகள் அமைப்பதிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான பூங்காகளையும் உருவாக்கலாம்.

மக்களின் கவலையெல்லாம் தங்களுடைய முதலீடுகள் லாபம் தரகூடியவையாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்பதே. அரசாங்கம்தான் ஆரோக்யமான முதலீடுகளுக்கு சலுகைகளும் தவறான முதலீடுகளுக்கு கூடுதலான வரிச்சுமையையும் சுமத்தி அதை கட்டுப்படுத்தவேண்டும்.

எனவே இது போன்ற பிரச்சினைகளை தடுக்க அரசு எடுக்கவேண்டிய முடிவுகள்.

1) வளர்ந்து வரும் நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விரைவாக அனுமதி அளிப்பதோடு மட்டுமில்லாமல், இந்த குடியிருப்புகளுக்கு முத்திரைதாள் கட்டணத்தை குறிப்பிட்டகாலத்துக்கு ரத்து செய்யவேண்டும்.

2) நகரங்களில் நிலங்கள் மனைகளாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்டகாலத்துக்குள் அவற்றை (வீடுகளாக) பயன்ப்டுத்தாவிட்டால் ஆண்டுதோறும் அந்த மனைகளின் மீது 10 அல்லது 20 சதவிகித அபராத வரி விதிக்கவேண்டும்.

கடலூர் பார்வை, ஏப்ரல் இதழில் வெளியானவை