சரியா, தவறா?

டெல்லியில் பிஹாரிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு மட்டுமில்லாமல், தங்களுடைய திருவிழா கொண்டாட்டங்களில் அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் பெரும் தொந்தரவாய் இருக்கிறது என்றும் ஒரு டெல்லிவாசி புலம்பியிருக்கிறார்.
மக்கள்தொகை பெருக்கம் இந்தியாவை பல்வேறு வகையில் பாதித்து, வேலைவாய்ப்பு என்பதே அரிதாகிவிட்ட நிலையில், சில மாநிலங்கள் தங்கள் நிர்வாக திறமையினால் பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கிவருகின்றன. அதேநேரத்தில் மக்கள்தொகை பெருக்கத்தையும் கட்டுபடுத்தினால்தான் பொருளாதார சுபிட்சம் என்பதை உனர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மற்றும் சலுகைகள் மூலம் அதையும் வெற்றிகரமாக கட்டுபடுத்திவருகின்றன. ஆனால் பிஹார், உ.பி. மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியும் இல்லை, மக்கள்தொகையை கட்டுபடுத்துவதிலும் தீவிரமாகவும் இல்லை.
லட்சியங்களோடு வசதி வாய்ப்பையும் தேடி மனிதர்கள் இடம் மாறி போவதுண்டு. ஆனால் மக்கள்தொகையை கட்டுபடுத்தாமல், அதன் மூலம் பெருகிவரும் மனிதர்களை பிற மாநிலங்களின் தலையில் கட்டுவது என்பது எந்த விதத்திலும் ஏற்று கொள்ளமுடியாத ஒன்று.
இந்தியா அனைவருக்கும் பொதுவானது, இந்த நாட்டின் பிரஜைகள் இந்தியாவின் எந்த பகுதியிலும் வாழ உரிமை இருக்கிறது என்று வாதிடும் இவர்கள், இந்தியாவின் பிரச்சினைகளும் அனைவருக்கும் பொதுவானவை எனவே மக்கள்தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் பொருதாரவளர்ச்சிக்கு உதவ வேண்டிய கடமை பிற மாநிலங்களைபோல தமக்கும் உண்டு என்பதை உணரவேண்டும். இல்லாவிட்டால் இந்த மாநிலங்களை சேர்ந்த மக்கள் பிற மாநிலங்களில் குடியேறுவதை தடை செய்வதுதான் ஒரேவழி
No comments:
Post a Comment