Monday, March 3, 2008

CUDDALORE PAARVAI - MARCH ISSUE- JOKES

ஜோக்ஸ்

அரசியல்வாதிகளுக்கு தங்கள் பிள்ளைகள் மீதோ அல்லது தங்கள் தலைவர்கள் மீதோ பாசம் அதிகமாய் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்த மனிதருக்கு இருக்கும் பிள்ளைபாசம் கொஞ்சம் ஓவர்தான்!

"என் பையனுக்கு கண்டிப்பா பாரதரத்னா விருது கொடுத்தாவனும்."

"அப்படியா? உங்க புள்ள அப்படி என்ன சாதனை பண்ணியிருக்காரு?"

"தவறான பாதையில போக முயற்சி செய்த பலஆயிரக்கணக்காண பேரை தடுத்து நிறுத்தி அவங்களுக்கு சரியான பாதையை காட்டியிருக்கான்."

"அப்படியா! ரொம்ப நல்ல விஷயமாச்சே. உங்க பையன் ஏதாவது பொதுநல இயக்கம் நடத்துறாரா?

"இல்ல. டிராபிக் போலீஸா இருக்கான்."


************************************
( வால்) பையன்

ஒரு நகரில் பூகம்பம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாக, அந்த நகரை சேர்ந்த ஒருவர் தன் மகனை வெளியூரிலுள்ள தன் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். கூடவே 'இங்கே பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதால், ஆபத்தான நேரத்தில் என் மகனையும் இழுத்துக்கொண்டு ஓடமுடியாது. எனவே சில நாட்களுக்கு என் மகன் உங்கள் வீட்டில் இருக்கட்டும்' என்று ஒரு கடிதமும் கொடுத்தணுப்பினார்.

மறுநாளே மகன் திரும்பிவர, கையில் ஒரு கடிதம் ' உங்கள் மகனை நீங்களே

வைத்துகொள்ளுங்கள், பூகம்பத்தை வேண்டுமானால் அனுப்பிவையுங்கள்.'



கடலூர் பார்வை இலவச விளம்பர இதழில் வெளியானவை.

No comments: