Monday, March 17, 2008
CHANGE YOUR TEMPLATE
பதிவர்கள் பலர் அழகான தோற்றத்துடன் இப்போது வரும் finalsense தளத்தின் Template க்கு மாற விரும்புகின்றனர். அதை எப்படி செய்வது என்று தயங்கி நின்று விடுகின்றனர். http://ask-ravi.blogspot.com/ என்ற தளத்தில் ரவி உங்களுக்கு படங்களுடன் விளக்கமாக புரியும்படி சொல்லியிருக்கிறார். மேலும் பல உபயோகமான தகவல்களும் இந்த தளத்தில் இருக்கிறது.
Monday, March 3, 2008
CUDDALORE PAARVAI - MARCH ISSUE- JOKES
ஜோக்ஸ்
அரசியல்வாதிகளுக்கு தங்கள் பிள்ளைகள் மீதோ அல்லது தங்கள் தலைவர்கள் மீதோ பாசம் அதிகமாய் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்த மனிதருக்கு இருக்கும் பிள்ளைபாசம் கொஞ்சம் ஓவர்தான்!
"என் பையனுக்கு கண்டிப்பா பாரதரத்னா விருது கொடுத்தாவனும்."
"அப்படியா? உங்க புள்ள அப்படி என்ன சாதனை பண்ணியிருக்காரு?"
"தவறான பாதையில போக முயற்சி செய்த பலஆயிரக்கணக்காண பேரை தடுத்து நிறுத்தி அவங்களுக்கு சரியான பாதையை காட்டியிருக்கான்."
"அப்படியா! ரொம்ப நல்ல விஷயமாச்சே. உங்க பையன் ஏதாவது பொதுநல இயக்கம் நடத்துறாரா?
"இல்ல. டிராபிக் போலீஸா இருக்கான்."
************************************
( வால்) பையன்
ஒரு நகரில் பூகம்பம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாக, அந்த நகரை சேர்ந்த ஒருவர் தன் மகனை வெளியூரிலுள்ள தன் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். கூடவே 'இங்கே பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதால், ஆபத்தான நேரத்தில் என் மகனையும் இழுத்துக்கொண்டு ஓடமுடியாது. எனவே சில நாட்களுக்கு என் மகன் உங்கள் வீட்டில் இருக்கட்டும்' என்று ஒரு கடிதமும் கொடுத்தணுப்பினார்.
மறுநாளே மகன் திரும்பிவர, கையில் ஒரு கடிதம் ' உங்கள் மகனை நீங்களே
வைத்துகொள்ளுங்கள், பூகம்பத்தை வேண்டுமானால் அனுப்பிவையுங்கள்.'
கடலூர் பார்வை இலவச விளம்பர இதழில் வெளியானவை.

CUDDALORE PAARVAI - MARCH ISSUE- NEWS
சரியா, தவறா?
சில விஷயங்கள் மேம்போக்கான பார்வையில் தவறாக தெரிந்தாலும், அவர்களுடய கோரிக்கையில் இருக்கும் நியாயங்களையும் நாம் கவனிக்கவேண்டும். மும்பையில் வடஇந்தியர்களுக்கு எதிராக ராஜ்தாக்ரே போராட்டத்தை ஆரம்பிப்பித்திருப்பது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்ககூடியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிஹார் மற்றும் உ.பி மாநில மக்களால் பிற மாநிலங்களில் ஏற்படும் பிரச்சினைகளையும் இங்கே கவணத்தில் கொள்ளவேண்டும். பிஹாரிகள் மீதான கோபம் மஹாரஷ்டிராவில் மட்டும் வெளிப்படவில்லை, பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலும் பிஹாரிகள் மீது வெறுப்புனர்வு தொடர்கிறது. அஸ்ஸாமில் இந்திபேசும் (பிஹாரிகள் மற்றும் உ.பி.யை சேர்ந்தவர்கள்) மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். பஞ்சாபிலும் பிஹார் விவசாயிகள் பெருமளவில் குடியேறி குறைந்த கட்டணத்தில் வேலை செய்ய தயாராய் இருப்பதால், உள்ளுர் ஆட்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டு, அவர்களும் பிஹாரிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
டெல்லியில் பிஹாரிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு மட்டுமில்லாமல், தங்களுடைய திருவிழா கொண்டாட்டங்களில் அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் பெரும் தொந்தரவாய் இருக்கிறது என்றும் ஒரு டெல்லிவாசி புலம்பியிருக்கிறார்.
மக்கள்தொகை பெருக்கம் இந்தியாவை பல்வேறு வகையில் பாதித்து, வேலைவாய்ப்பு என்பதே அரிதாகிவிட்ட நிலையில், சில மாநிலங்கள் தங்கள் நிர்வாக திறமையினால் பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கிவருகின்றன. அதேநேரத்தில் மக்கள்தொகை பெருக்கத்தையும் கட்டுபடுத்தினால்தான் பொருளாதார சுபிட்சம் என்பதை உனர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மற்றும் சலுகைகள் மூலம் அதையும் வெற்றிகரமாக கட்டுபடுத்திவருகின்றன. ஆனால் பிஹார், உ.பி. மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியும் இல்லை, மக்கள்தொகையை கட்டுபடுத்துவதிலும் தீவிரமாகவும் இல்லை.
லட்சியங்களோடு வசதி வாய்ப்பையும் தேடி மனிதர்கள் இடம் மாறி போவதுண்டு. ஆனால் மக்கள்தொகையை கட்டுபடுத்தாமல், அதன் மூலம் பெருகிவரும் மனிதர்களை பிற மாநிலங்களின் தலையில் கட்டுவது என்பது எந்த விதத்திலும் ஏற்று கொள்ளமுடியாத ஒன்று.
இந்தியா அனைவருக்கும் பொதுவானது, இந்த நாட்டின் பிரஜைகள் இந்தியாவின் எந்த பகுதியிலும் வாழ உரிமை இருக்கிறது என்று வாதிடும் இவர்கள், இந்தியாவின் பிரச்சினைகளும் அனைவருக்கும் பொதுவானவை எனவே மக்கள்தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் பொருதாரவளர்ச்சிக்கு உதவ வேண்டிய கடமை பிற மாநிலங்களைபோல தமக்கும் உண்டு என்பதை உணரவேண்டும். இல்லாவிட்டால் இந்த மாநிலங்களை சேர்ந்த மக்கள் பிற மாநிலங்களில் குடியேறுவதை தடை செய்வதுதான் ஒரேவழி
Labels:
advertisement,
cellphone news,
comments
Subscribe to:
Posts (Atom)